’ரஜினிகாந்த், பெரியார் கொள்கைகளுக்கு ’ஆதரவாக’ செய்த விஷயம்!’ – பிரபலம் கூறிய நிகழ்வு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் நடைபெற்ற ’துக்ளக்’ பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரியார் பற்றி பேசிய விஷயம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

Super star Rajinikanth Periyar Controversy supports Periyarism

இது குறித்து ஊடகங்களும், நெட்டிசன்களும் பல்வேறு கருத்துக்களை பேசிவரும் நிலையில், ரஜினி தான் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்தார். இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தன் முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதி இருக்கிறார்:

‘அனைவருக்கும் வணக்கம்!

எனக்கு அரசியல் தெரியாது!

ஆனால் அண்ணன் சூப்பர் ஸ்டாரைப பற்றி

எனக்கு மிக நன்றாகவே தெரியும்!

திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைப் பொறுத்தவரை,

யார் மனதையும் நோகும் படி

பேசக்கூடியவர் அல்ல!

ஏன் அவரை திட்டுபவர்களைக் கூட

பதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர்!

எதையும் ப்ளான் செய்தோ,

திட்டமிட்டோ

அவதூறாக பேசக்கூடியவர் அல்ல!

ஆனால் பெரியாரைப் பற்றி

அவதூறாக பேசிவிட்டதாக

கூறுகின்றனர்

அப்படி பேசக்கூடியவர் என்றால்

2006 ஆம் ஆண்டு

பெரியாரின் தீவிரத்தொண்டரான

இயக்குநர் திரு வேலு பிரபாகரன் அவர்கள், "பெரியார் கருத்துக்களை தாங்கி எடுத்த படத்தை வெளியிட

முடியாமல் தவித்தபோது"

திரு வேலுபிரபாகரனே

எதிர்பாராத பெரும் தொகையை கொடுத்து,

அப்படத்தை வெளியிட எதற்காக ரஜினி சார் உதவி செய்ய வேண்டும்?

பெரியார் மீது

பெரும் மதிப்பு கொண்டவர்தான்

திரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்கள்,

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!’

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor