''ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும், அப்புறம்...'' - உதயநிதி ஸ்டாலின் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உருவாகியிருக்கும் படம் 'சைக்கோ'. டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Udhayanadhi Stalin Speaks about, Rajinikanth, Vijay, Ajith and Psycho

இந்த படத்தின் டீசர்  மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய உன்ன நெனச்சு மற்றும் நீங்க முடியுமா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் ராம், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தன்வீர் மிர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படம் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பிரபலங்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி என தொகுப்பாளர் தாரா உதயநிதியிடம் சில பெயர்களை முன் வைத்தார்.

தளபதி விஜய்யின் பெயரை சொன்ன போது, 'எப்படி இவ்ளோ யங்கா , அதே எனர்ஜியோட இருக்க முடியுது?' என்ற கேள்வியை சொன்னார். தல அஜித்தின் பெயரை சொன்ன போது, ''எப்படி உங்களால இவ்ளோ ஃபேன் பேஸ் மன்றமே இல்லாம மெயின்டெயின் பண்ண முடியுது, எப்படி ஜென்டில்மேனா இருக்க முடியுது?'' என்றார்.

மேலும் சமீபத்தில் அவர் செய்திருந்த ட்வீட் ரஜினியை குறிப்பிட்டதாக சர்ச்சையானது அதுகுறித்து கேட்ட போது, ''அவரை வைத்து ட்வீட் போட்டேனு எதனை வைத்து சொல்றீங்கனு தெரியல. அவர் இன்னும் அரசியலுக்கே வரல. அரசியலுக்கு வந்த பிறகு பதில் சொல்றேன்'' என்றார்.

''ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும், அப்புறம்...'' - உதயநிதி ஸ்டாலின் அதிரடி வீடியோ

Entertainment sub editor