சூப்பர் ஸ்டாரின் தர்பாரில் இருந்து வெளியான ’தாறுமாறு சிங்கிள்’ பாடல் வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படம் தர்பார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் நயந்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.
ஏற்கெனவே இந்த படத்தின் இருந்து ’டும் டும்’, ’சும்மாக்கிழி’ பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ‘தாறுமாறு சிங்கிள்’ படலும் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அனிருத் மற்றும் அர்ஜுன் சாண்டி பாடியுள்ளனர்.
சூப்பர் ஸ்டாரின் தர்பாரில் இருந்து வெளியான ’தாறுமாறு சிங்கிள்’ பாடல் வீடியோ இதோ! வீடியோ