ரஜினிகாந்த் அதிரடி - ''மன்னிப்பு கேட்க முடியாது''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

Rajinikanth Clarifies about Periyar COntroversy in Thuglaq magazine Event

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ''பெரியார் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் ராமன் சீதையை ஊர்வலமாக கொண்டு சென்றதாகவும் அதனை துக்ளக் இதழ் மட்டுமே அந்த செய்தியை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இது செய்தி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்று ஒரு தரப்பினர் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், குறிப்பிட்ட நாளிதழில் அந்த செய்தி வெளியாகியுள்ளதாகவும் அதன் பெயரிலேயே அந்த கருத்தினை வெளியிட்டதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார்.

Entertainment sub editor