www.garudabazaar.com

"என் அப்பா, அம்மாக்கு அப்புறம் இப்டி பண்ணது நீங்க தான்".. உருகிய ஜிபி முத்து!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

gp muthu about bathroom cleaning team in biggboss 6 tamil

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. உள்ளே எந்த அளவுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, எப்போதும்  கலகலப்பாக இருந்தாலும் தான் நடிப்பதாக தனலட்சுமி குறிப்பிட்டதை எண்ணி கண்ணீர் விடவும் செய்திருந்தார்.

இதன் பின்னர், மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள ஜிபி முத்து, பிக்பாஸ் வீட்டில் பட்டையைக் கிளப்பி வருகிறார். அந்த வகையில், பாத்ரூம் சுத்தம் செய்யும் டீம் குறித்து ஜிபி முத்து பேசியுள்ள விஷயமும் நெட்டிசன்கள் கவனத்தை பெற்று வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள 20 போட்டியாளர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில், பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியில் இருக்கும் நபர்கள், மற்ற அணியில் இருக்கும் போட்டியாளர்களை தூக்கிக் கொண்டும், சிவப்பு கம்பளம் மீது நடக்க வைத்து கொண்டும் பாத்ரூம் அழைத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில், வேறு அணியில் இருந்த ஜிபி முத்துவை பாத்ரூம் செல்ல தூக்கிக் கொண்டே சென்றார் ராபர்ட் மாஸ்டர். இந்த சம்பவம், கடும் ரணகளத்தை உண்டு பண்ணி இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒவ்வொரு அணியினருக்கும் எதிர் அணியினர் மார்க் கொடுக்கும் சுற்று நடந்திருந்தது.

அப்போது பேசிய ஜிபி முத்து, பாத்ரூம் அணியினருக்கு தான் முழு மதிப்பெண் கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், தனது அப்பா அம்மாவிற்கு பிறகு தன்னை பாத்ரூம் செல்ல தூக்கிக் கொண்டு சென்றது இவர்கள் தான் என்றும், அதனால் அவர்களை தன்னால் மறக்க முடியாது என்றும் ஜிபி முத்து குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, சலிப்பு இல்லாமல் இதனை செய்ததற்காக பாத்ரூம் அணியில் உள்ள அனைவரையும் அவர் பாராட்டவும் செய்திருந்தார். ஜிபி முத்து சொன்ன விஷயம் குறித்து இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

gp muthu about bathroom cleaning team in biggboss 6 tamil

People looking for online information on BB6 Tamil, Biggboss 6, GP MUTHU, Parents will find this news story useful.