www.garudabazaar.com

ஆயிஷா எலிமினேஷன் ஆனதுக்கு கைதட்டினாரா விக்ரமன்..? ரசிகர்களின் விளக்கம்! Bigg Boss 6 Tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

vikraman over clapped for ayesha elimination bigg boss 6

Also Read | Thunivu : துணிவு படத்துக்காக அஜித்துக்கு சிலை வெச்ச ‘வீரம்’ உணவக உரிமையாளர்..

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இதற்கு அடுத்த கட்டமாக அசல், அடுத்த வாரத்தில் ஷெரினா, பின்னர் மகேஸ்வரி, அடுத்து நிவாஷினி, அடுத்து ராபர்ட், அடுத்து குயின்ஸி என போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர்.

இதேபோல், பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம், சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக இருந்தது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்திருந்தார். எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் அது. முந்தைய வாரங்களை போல அதிகம் சண்டை சச்சரவுகள் இல்லாமல், சற்று கலகலப்பாக இந்த வாம் போனது.

இதில் மைக்கேல் ஜாக்சன், சிவாஜியின் நேசமணி, வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம், எம். ஆர். ராதா, சரோஜாதேவி, விக்ரமின் அந்நியன் கெட் அப், வடிவேலுவின் நாய் சேகர் என பல ஐகானிக் கதாபாத்திரங்களை சற்றே பெயர் மாற்றி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வலம் வந்திருந்தனர். மேலும், தாங்கள் ஏற்ற கதாபாத்திரம் போல, அவர்கள் நடை, உடை, பாவனை உள்ளிட்ட விஷயங்களை சிலர் செய்திருந்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, வார இறுதியில் வந்த கமல்ஹாசன், போட்டியாளர்களின் கடந்த வார செயல்பாடு குறித்து பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு மத்தியில், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்களும் இருந்த நிலையில், சனிக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேறி இருந்தார். இதற்கடுத்து, அசீம், கதிரவன், ADK, ஜனனி, ஆயிஷா உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

இதில், அசீம், ADK, கதிரவன் உள்ளிட்டோர் Save செய்யப்பட்டதாக கமல் அறிவிக்கவே, கடைசியில் ஜனனி மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் இருந்தனர். அப்போது யார் வீட்டில் இருந்து வெளியேறுவார் என சக போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்க, அனைவருமே ஆயிஷா பெயரை தான் தெரிவித்தனர். இறுதியில் ஜனனி Save ஆவதாக அறிவித்த கமல் ஆயிஷா எலிமினேட் ஆவதாக கார்டில் பெயரை காட்டி அறிவிக்க, அனைவருமே கைத்தட்டினர். விக்ரமனும் கைதட்டியிருந்தார்.

அப்போது, “அவ்ளோ குஷியோ.. பரவால்ல” என ஆயிஷா கூறினார். அந்த சமயத்தில், “விக்ரமன், நான் ஜனனி Save ஆனதுக்கு கைதட்டினேன்” என மெல்லியதான குரலில் கூறியிருந்த வீடியோ கிளிப்பை ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பலரும் ஆயிஷா எலிமினேட் ஆவதாக அறிவித்தவுடன் விக்ரமன் கைத்தட்டுகிறார் என விமர்சித்து வந்த நிலையில், விக்ரமன் இப்படி சொல்லும் அந்த குறிப்பிட்ட டைம்லைன் கொண்ட வீடியோ கிளிப்பை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | ‘இதெல்லாம் 2K Kids பாத்துருக்க மாட்டாங்க’.. ரஜினியின் 73வது பிறந்தநாள்.. Viral த்ரோபேக் ஃபோட்டோஸ்..

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vikraman over clapped for ayesha elimination bigg boss 6

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6 will find this news story useful.