LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

20 வருசத்துக்கு அப்புறம்.. ரஜினி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. வெளியானது ஜெயிலர் அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'ஜெயிலர்' படத்தில் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள், தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

Ramya krishnan on board for rajinikanth next movie jailer

Also Read | ஷங்கர் இயக்கும் 'இந்தியன் - 2'.. படத்துல நடிகர்கள் யார் யாரெல்லாம் நடிக்கிறாங்க? முழு விவரம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'அண்ணாத்த' திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்த நிலையில், ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அண்ணாத்த திரைப்படம் பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என நெல்சன் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வித்தியாசமான கதைக் களத்துடன் இயங்கி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது நான்காவது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பும் தற்போது நெல்சனுக்கு கிடைத்துள்ளது.

Ramya krishnan on board for rajinikanth next movie jailer

அந்த வகையில், ஜெயிலர் படத்தின் போஸ்டர் ஒன்று, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷால்ட் அன்ட் பெப்பர் லுக்கில், இந்த போஸ்டரில் தோன்றி இருந்தார். அது மட்டுமில்லாமல், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருந்ததையும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் தற்போது இணைந்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தினை சன் பிக்சர்ஸ், தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Ramya krishnan on board for rajinikanth next movie jailer

அதன்படி, நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். படையப்பா படத்தில், ரஜினிக்கு எதிராக 'நீலாம்பரி' என்னும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் மிரள வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். இன்று வரை, நீலாம்பரி என்ற பெயரைக் கேட்டதும் படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணனை தான் பலருக்கும் நினைவில் வரும். இதன் பின்னர், ரஜினியின் 'பாபா' படத்தில், சிறப்பு தோற்றத்தில் வந்த ரம்யா கிருஷ்ணன், பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரஜினியுடன் இணைந்துள்ள நடிக்க உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் இந்த காம்போவை திரையில் பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Ramya krishnan on board for rajinikanth next movie jailer

Also Read | Video: சிவமணி & ராஜேஷ் வைத்யா.. களைகட்டிய கச்சேரி.. ஒன்றாக ரசித்த AR அமீன் & அபிஷேக் பச்சன்.!

தொடர்புடைய இணைப்புகள்

Ramya krishnan on board for rajinikanth next movie jailer

People looking for online information on Jailer, Rajinikanth, Ramya Krishnan, Ramya krishnan in Jailer Movie will find this news story useful.