www.garudabazaar.com

BREAKING: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ? ஹீரோ யாரு? போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

Super Star Rajinikanth Cameo Role in Aishwarya next Directorial film

Also Read | THUNIVU: அப்டேட் இருக்கா?.. ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன துணிவு படத்தின் முன்னணி டெக்னீசியன்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

அண்மையில் அதிக வருமான வரி செலுத்துவதற்காக, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில சார்பில் வழங்கப்பட்ட கௌரவ சான்றிதழை, தமது தந்தை சார்பில் சென்று பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, பெருமையான மகளாக உணர்ந்ததாகவும் அப்போது தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை (05.11.2022) இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக 'எஃப்ஐஆர்' படம் வெளியானது.‌ இப்படம் கடந்த 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிட்டது.

தற்போது விஷ்ணு விஷால், ஆர்யன் & கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Also Read | BIGG BOSS: "ஒழுங்கா சொல்லிட்டு போ.. " - தனாவின் புகார்.. கோவப்பட்ட ராம்.! திரும்பவும் அவருக்கே சிறையா?

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Cameo Role in Aishwarya next Directorial film

People looking for online information on Aishwarya Rajinikanth, Rajinikanth, Rajinikanth Cameo Role, Super Star Rajinikanth, Vishnu Vishal will find this news story useful.