www.garudabazaar.com

BIGG BOSS: "ஒழுங்கா சொல்லிட்டு போ.. " - தனாவின் புகார்.. கோவப்பட்ட ராம்.! திரும்பவும் அவருக்கே சிறையா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

Bigg Boss Tamil Season 6 day 26 dhanalakshmi Ram Conversation

Also Read | கோமாளி பட இயக்குனரின் 'லவ் டுடே'.. டைட்டில் கார்டில் தளபதி விஜயை கௌரவித்த படக்குழு..😍

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

Bigg Boss Tamil Season 6 day 26 dhanalakshmi Ram Conversation

இவர்களுள் நடிகர் ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.   இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அசல் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது. எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு  பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும். இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.

Bigg Boss Tamil Season 6 day 26 dhanalakshmi Ram Conversation

இந்நிலையில் 26வது நாள் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில், டி ஆர் பி டாஸ்க்கில் இருந்து ஒரு மோசமான போட்டியாளரை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என பிக்பாஸ் கேட்கிறார். அதற்கு அசீம், மகேஸ்வரி பெயரை சொல்கிறார். ஏடிகே, தனலெட்சுமி பெயரை சுயநலமான முடிவுகளை எடுத்தது போல இருந்தது என காரணத்துடன் சொல்கிறார்.

பிறகு பேசும் தனலெட்சுமி, "அணியில் வேலை செய்ததையே பார்க்கவில்லை என்றால் ராம் பெயரை சொல்வேன்.. வேலைக்காக கண் விஷயத்தை காமிக்கிறதா சொல்வேன்" என தனலெட்சுமி கூறுகிறார்.

Bigg Boss Tamil Season 6 day 26 dhanalakshmi Ram Conversation

இதற்கு பதில் அளித்த ராம், "அப்படி எல்லாம் நீ சொன்னால் நான் சும்மா இருக்க முடியாது. காரணம்னா ஒழுங்கா சொல்லிட்டு போ.. தேவையில்லாமல் என் உடல் நிலை விஷயத்தை சொல்வது சுத்தமா சரி கிடையாது" என்கிறார். 

இந்த ப்ரோமோ வீடியோ "ராம் சிறைக்கு அனுப்பபடுகிறீர்கள்" என பிக்பாஸ் குரலில் முடிகிறது.

Also Read | "அண்ணன் சிம்பு"..'பத்து தல' படத்தின் BTS போட்டோவை பகிர்ந்து கௌதம் கார்த்திக் உருக்கமான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil Season 6 day 26 dhanalakshmi Ram Conversation

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi Ram Conversation, Dhanalakshmim, Ram, Vijay Television, Vijay tv will find this news story useful.