www.garudabazaar.com

விஷ்ணு விஷால் & 'பூங்குழலி' ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் புதிய படம்.. வெளியான FIRST LOOK POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal Aishwarya Lekshmi Gatta Kusthi First Look Posters Released

Also Read | "புயல் அடிக்க போகுது".. ஷாருக்கான் & தீபிகா படுகோனே நடிக்கும் 'பதான்'.. அதிரடியான தமிழ் டீஸர்!

இவர் வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக 'எஃப்ஐஆர்' படம் வெளியானது.‌

Vishnu Vishal Aishwarya Lekshmi Gatta Kusthi First Look Posters Released

இப்படம் கடந்த 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிட்டது.பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR.விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில்,  “எஃப் ஐ ஆர் (FIR)” படத்தை நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கினார்.‌

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்தனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் & 'பொன்னியின் செல்வன் பூங்குழலி'  ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Vishnu Vishal Aishwarya Lekshmi Gatta Kusthi First Look Posters Released

விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த படம் குஸ்தியைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்குகிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரசன்னா ஜி கே எடிட்டராக பணியாற்றுகிறார். கலை இயக்கத்தை உமேஷ் மேற்கொள்கிறார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க உள்ளனர்.

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா என விளையாட்டு கதைகளை மையப்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்த விஷ்ணு விஷால் மீண்டும் இந்த படத்தின் மூலம் ஸ்போர்ட்ஸ் ஜானர் படத்துக்கு திரும்பியுள்ளார்.

Also Read | BREAKING: சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE'.. பிரபல OTT-யில் ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal Aishwarya Lekshmi Gatta Kusthi First Look Posters Released

People looking for online information on Aishwarya Lekshmi, Gatta Kusthi, Gatta Kusthi First Look Posters, Vishnu Vishal will find this news story useful.