ஸ்ருதிஹாசனை தொடர்ந்து போலீஸ் பற்றிய படத்தில் இணைந்த பிரபல நடிகர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 07, 2019 04:42 PM
தெலுங்கில் பிரபல நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் ‘RT66’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானதை தொடர்ந்து தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

கோபிசந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கும் போலீஸ் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு ஹீரோ ரவி தேஜா நடிக்கிறார். ‘பலுபு’ என்ற படத்திற்கு பிறகு நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கிறார்.
அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நடிகர் சமுத்திரக்கனி இறுதியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
Welcoming Versatile actor @thondankani garu on board 😊👍#RT66 pic.twitter.com/pyUtrlxFdl
— Gopichand Malineni (@megopichand) November 7, 2019