லாக் டவுன்ல என்ன பண்ணறீங்க? சன்னி லியோனின் வைரலாகும் சன் பாத் பிக் இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாட்டையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப்  பிரச்னையால் வீட்டிலேயே சதாசர்வ காலம் முடங்கிக் கிடக்க சிலருக்கு முடிவதில்லை. காத்து வாங்க போறேன், கடைக்குப் போறேன் என்று இப்போதும் அரசு உத்தரவை மீறி செயல்படுகின்றனர். அத்யாவசியத் தேவைகளுக்கு பாதுகாப்பாக வெளியே செல்வது பிரச்சனை இல்லை. ஆனால் உள்ளே இருக்க முடியாமல் வெளியேறினேன் என்று சொல்வது வம்பை இல்லையில்லை வைரஸை கையில் ஏந்தி வரபேற்பதற்குச் சமமானதுதான். எனவே அனைவரும் அரசாங்கம் பொதுமக்களின் தற்காப்புக்காக விதித்துள்ள தடை உத்தரவை மதித்து நடக்க வேண்டும்.

Sunny Leone summer viral pic asking fans about lockdown

அனைத்து வணிகச் செயல்பாடுகளும் ஸ்தம்பித்துப் போயிருக்க, திரைத்துறையைப் பற்றிய செய்திகள் இணையத்தில் தினமும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரபலங்கள் தங்களுடைய சோஷியல் மீடியா பக்கத்திலிருந்து ரசிகர்களிடம் நேரடியாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் படு கூலான ஒரு ஃபோட்டோ பதிவிட்டுள்ளார். அதில் சன்னி தன் ரசிகர்களிடம் இவ்வாறு நலம் விசாரித்துள்ளார், ‘என்னுடைய பொழுதுகள் இப்படித்தான் போகிறது. உங்களுடைய லாக் டவுன் எப்படி போகிறது? என்று கேப்ஷன் அளித்துள்ளார்.

 

சும்மாவே சன்னியின் ரசிகர்கள் அவர் என்ன சொன்னாலும் வைரலாக்கி விடுவார்கள், இப்படி ஒரு அழகான புகைப்படத்தை விட்டுவைப்பார்களா? வலைத்தளத்தில் வலம் வரும் அந்த tweet இதுதான்

Entertainment sub editor