ஐயோ! இப்படி மாத்திட்டாங்களே - இணையத்தில் உலா வரும் 'பிரேமம்' ஹீரோயினின் Fake புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் பிரேமம். சாய் பல்லவி, மடோனா சபாஸ்டின், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோருக்கு அறிமுகப்படமாக அமைந்த இந்த படம் மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Premam Actress Anupama Parameswaran on her Morphed photos in twitter | இணையத்தில் உலவும் தனது எடிட் செய்யப்பட்ட கவர்ச்சி படங்கள் பற்றி ப

மேலும் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் நடித்த அனைத்து நாயகிகளும் சினிமா துறையில் இன்று தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றனர். குறிப்பாக அனுபமா பரமேஷ்வரன்- மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் காட்டி வந்தார்.

தமிழில் கொடி படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த அனுபமா, லாக்-டவுனுக்கு முன்பு வரை அதர்வாவுடன் ’தள்ளிப் போகாதே’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை ஜெயம் கொண்டான், சேட்டை, பூமராங் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கிவந்தார்.

இந்நிலையில்  சமீபத்தில் அனுபமாவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் சிலர் அவர் கவர்ச்சிக்கு ட்ராக் மாறி விட்டார் என்று சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த புகைப்படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த அனுபமா, அது போலியானது என்றும் இதுபோன்ற மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பார்த்தால் ரிப்போர்ட் செய்யுமாறும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Entertainment sub editor