இயக்குநர் சுந்தர்.சியின் அடுத்த திரில்லர் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 13, 2019 11:29 PM
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரஸா, ரம்யா கிருஷ்ணன், பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனையடுத்து சுந்தர்.சி விஷாலை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சுந்தர்.சி முக்கிய வேடத்தில் நடித்து உருவாகியுள்ள படம் இருட்டு. இந்த படத்தை முகவரி, தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வி.இஸட்.துரை இயக்குகிறார்.
இந்த படத்தை ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கிரிஷ் இசையமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சாய் தன்ஷிகா, விடிவி கணேஷ், யோகி பாபு விமலா ராமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.