சன் டிவி ‘நந்தினி’ சீரியல் நடிகைக்கு திருமணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமான சீரியல் நந்தினி. பாம்பு பழி வாங்கும் கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்த நித்யா ராமிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

Sun TV Nadhini serial fame actress Nithya Ram gets engaged

கன்னட, தமிழ், தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து பிரபலமான நித்யா, சன் டிவியில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். கன்னட சீரியலான ‘பென்கியல்லி அரலிட ஹூவு’ என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான நித்யா, கடந்த 2015ம் ஆண்டு ‘முத்து மனசே’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் சினிமாவில் அறிமுகமானார்.

4 மொழிகளில் ஒளிபரப்பான ‘நந்தினி’ சீரியலின் ஹீரோயினான நித்யா, சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தல் சுட்டீஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவின் நடுவராக இருந்தார். மேலும், சன் டிவியில் குஷ்பு நடித்து வரும் ‘லக்ஷ்மி’ ஸ்டோர்ஸ் சீரியலிலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை நித்யா ராம் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.