''ரெண்டு பேரும் என் முன்னாடியே கொஞ்சிக்கிட்டாங்க'' - தன் கணவர் குறித்து நடிகை ஜெயஸ்ரீ வேதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வம்சம்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயஸ்ரீ. இவருக்கும் 'ஆஃபிஸ்', 'அதே கண்கள்', 'சித்திரம் பேசுதடி' உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த ஈஸ்வர் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

Serial Actress Jayashree Speaks about her Husband Eeshwar

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஈஸ்வர் குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதாகவும், வேறு நடிகையுடன் தொடர்பு உள்ளதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் ஈஸ்வரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகை ஜெயஸ்ரீ Behindwoods Air-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், ''ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஈஸ்வர் என்னிடம் டைவர்ஸ் கேட்க ஆரம்பிச்சாரு. கூட நடிச்சுட்டுருக்க பொண்ணோட தொடர்பு இருக்குனு ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்க. நான் முதல்ல நம்பல. அப்புறம் செட்ல இருந்து தகவல் வந்தது. உண்மைனு தெரிய வருது. என் முன்னாடியே வீடியோ கால் பேசிக்கிட்டாங்க, என் கண்ணு முன்னாடியே கொஞ்சிக்கிட்டாங்க'' என்று வேதனையுடன் கூறினார்.

''ரெண்டு பேரும் என் முன்னாடியே கொஞ்சிக்கிட்டாங்க'' - தன் கணவர் குறித்து நடிகை ஜெயஸ்ரீ வேதனை வீடியோ