ஷ்ருதி ஹாசனின் பிறந்தநாள் பரிசு இதோ... ரசிகர்களுக்கு மெலடி ட்ரீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம் லாபம். இப்படத்தின் முதல் சிங்கிளின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.

vijay sethupathy shruti haasan's, laabam's song promo released

இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். எதார்த்தமான கதையில் உலக அரசியலை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், மீண்டும் அவரை வைத்து 'லாபம்' படத்தை இயக்கி வருகிறார். ஷ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், லாபம் படத்தில் இருந்து 'யாழா' என்ற பாடலின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. ஷ்ருதி ஹாசன் இப்பாடலை பாடியுள்ளார். பாடகியாக தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் ஷ்ருதி ஹாசன், யுகபாரதி எழுதியுள்ள  இந்த மெலடி பாடலை தன் குரலால் மேலும் மெருகேற்றியிருக்கிறார். ஷ்ருதி ஹாசனின் பிறந்தநாளான இன்று இப்பாடலின் முன்னோட்டம் வெளியாகியிருப்பது, ஷ்ருதி ரசிகர்களுக்கு மெலடி ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

ஷ்ருதி ஹாசனின் பிறந்தநாள் பரிசு இதோ... ரசிகர்களுக்கு மெலடி ட்ரீட் வீடியோ

Entertainment sub editor