ஹாட்டான சம்மரில் கஷ்டப்படும் போலீஸாருக்கு குளு குளு மோர் வழங்கும் பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தண்ணீர் உள்ளிட்ட நீர் ஆகாரங்களை அருந்தும் படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ButterMilk distributed to Traffic cop by Allu Arjun's Geetha Arts

இந்நிலையில் ஸ்டைலிஷ் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அல்லு அர்ஜூன். இவரது தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ்,  வெயிலில் கஷ்டப்படும் போக்குவரத்து காவல்துறையினர், நகராட்சி ஊழியர்களுக்கு 200 லிட்டர் மோரை வழங்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், இந்த  சூடான கோடைகாலத்தில் வெப்பத்தை தணிக்க, போக்குவரத்து காவல்துறையினருக்கும், நகராட்சி பணியாளர்களுக்கும் மோர் வழங்கி வருகிறோம். மோர் தாகத்தை தணிக்க மட்டுமல்லாமல், உடலுக்கும் மிகவும் நல்லது. அதனால் ஹைதராபாத் முழுவதும் வழங்க முடிவு செய்துள்ளோம். என்று குறிப்பிட்டுள்ளது.