அட! 'தளபதி 63'யில் மேலும் ஒரு ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகிபாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் படம் 'தளபதி 63'. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Amritha to act in Vijay and Atlee's Thalapathy 63

இந்த படத்தில் இருந்து சுவாரஸியத் தகவல் கிடைத்துள்ளது.  எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் பிரபல நடிகை அம்ரிதா புட்ஃபால் பிளேயராக நடிக்கிறாராம்.

இவர் ஏற்கனவே விஜய் யேசுதாஸுடன் படைவீரன்,  விஜய் ஆண்டனியுடன் காளி ஆகிய படங்களில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய்யின் தெறி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.  

இந்த படத்தின் பாடல் காட்சிகள், மே 15, 16 ஆகிய தேதிகளில் கோகுலம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுவருவதாக தகவல்கள் கிடைத்தது.