சிம்புவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சீமான் - செம எனர்ஜியில் எஸ்.டி.ஆர் ! மாநாடு வைரல் க்ளிக்ஸ் இதோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் பூஜைக்கு இயக்குநர் சீமான் விசிட் அடித்துள்ளார்.

எஸ்.டி.ஆர் எனும் சிம்பு நடிக்கும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், ப்ரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாநாடு படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகரும் இயக்குநருமான சீமான் வருகை தந்துள்ளார். நடிகர் சிம்புவை சந்தித்து அவர் மாநாடு சிறப்பாக வர வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் சேரனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் ஷூட்டிங் சென்னையிலும் ஹைதரபாத்திலும் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
— sureshkamatchi (@sureshkamatchi) February 19, 2020