ஹர்பஜன் சிங் அழகை வர்ணித்த தருணம் - ''ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க''
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பல்வேறு நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தமிழ் சினிமாவின் ஃபேமஸ் டயலாக்குகளுடன் அவரது பதிவுகள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அவர் தற்போது பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணைந்து 'ஃபிரெண்ட்ஷிப்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால் ராஜ் இணைந்து இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் சதீஷ் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நம் சென்னை ஐபிஎல்-ன் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் இணைவது மகிழ்ச்சி'' என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹர்பஜன் சிங் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ''புது மாப்பிள்ளை சதீஷ் எப்படி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகமா பார்க்க அப்படியே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி தூக்கலா இருக்கட்டும் நல்லா நெருக்கி செய்வோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
புது மாப்பிள்ளை @actorsathish எப்பிடி இருக்கீங்க.தம்பி நல்லா சிரிச்ச முகம்.பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம் #Friendship https://t.co/VirWiDTbvN
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 18, 2020