சிம்பு-வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் 'மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிம்புவுடன் இந்த படத்தில் பணியாற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியானது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ’ஹீரோ’ படத்தில் நாயகியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ள நிலையில் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 2 வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதில் நடிகர் சிம்பு உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
#maanaadu2020 pic.twitter.com/Py9kTQWe0r
— sureshkamatchi (@sureshkamatchi) January 18, 2020
#maanaadu pic.twitter.com/NVvTHQycfe
— sureshkamatchi (@sureshkamatchi) January 18, 2020