சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி வெளியிட்ட ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் பட மோஷன் போஸ்டர்
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் சின்னத்திரை நடிகருமான ரியோ ராஜ், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

இதனையடுத்து ரியோ, 'பானா காத்தாடி', 'செம போத ஆகாதே' படங்களின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, சித்தார்த் விபின், எம்எஸ்பாஸ்கர, ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பாஸிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி வெளியிட்ட ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் பட மோஷன் போஸ்டர் வீடியோ