சிம்பு கேரக்டர் இது தான்! - வீடியோ மூலம் அதிரடியாக தெரிவித்த வெங்கட் பிரபு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படம் 'மாநாடு'. இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

STR's Maanaadu, Venkat Prabhu shares information about the film

அதன்படி இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் கம்போஸிங் பணிகளை தொடங்கிவிட்டதாக  வெங்கட் பிரபு அறிவித்தார்.

இதுகுறித்து வீடியோ மூலம் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, ''எஸ்டிஆர் உடன் முக்கியமான ஆர்ட்டிஸ்ட் இந்த படத்துல நடிக்கிறாரு. அது எஸ்டிஆரின் பிறந்தநாளின் போது அறிவிக்கப்படும்.

இந்த படத்துல சிம்பு முதன் முதலாக முஸ்லீம் வேடத்தில் நடிக்கிறார். மேலும் ரசிகர்கள் சிம்புவின் பெயரை சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் பெயரை நாங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் ஒருநாள் முழுவதும் எங்களுடன் படப்பிடிப்பில் இருக்கலாம். எனவே நீங்கள் #STRas என்ற ஹேஸ்டேக் மூலம் சொல்லுங்கள்'' என்றார்.

சிம்பு கேரக்டர் இது தான்! - வீடியோ மூலம் அதிரடியாக தெரிவித்த வெங்கட் பிரபு வீடியோ

Entertainment sub editor