நியூ லுக்கில் டிரெண்டியாக சென்னை திரும்பும் சிம்பு - ஃபோட்டோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 27, 2019 06:29 PM
சிம்பு நடிப்பில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகியிருந்தது. சுந்தர்.சி இயக்கிய இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு 'மாநாடு' படத்தில் நடிக்கவிருப்பதாக இருந்தது. சில காரணங்களால் அந்த படத்தில் வேறு நடிகரை வைத்து உருவாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
இந்நிலையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் 'மகாமாநாடு' என்று திரைப்படம் வெளியாகும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியானது. மேலும், வெளிநாட்டில் இருக்கும் சிம்பு, விரைவில் சென்னை திரும்புவார் என்றும். சென்னை திரும்பியதும், ரசிகர் மன்ற முக்கிய உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. மேலும் சமூக நலத்திற்கு தேவையான சில வளர்ச்சித் திட்டங்களும் வைத்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் சிம்பு பேங்காக்கில் இருந்து இன்று இரவு சென்னை திரும்புகிறாராம். மேலும் முற்றிலும் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் புதிய லுக்கில் சிம்புவின் புகைப்படம் தற்போது கிடைத்துள்ளது.