அமெரிக்க டிவி சீரிஸில் நடிக்கும் முதல் South Star ஸ்ருதி- புரொமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 27, 2019 06:00 PM
தென்னிந்திய நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'ட்ரெட்ஸ்டோன்' என்ற அமெரிக்க டிவி சீரிஸின் ஆக்ஷன் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

'ஜேசன் பார்ன்' என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பார்ன் (Bourne) ஐடன்டிடி’, ‘சுப்ரீமசி’, ‘அல்டிமேடம்’ உள்ளிட்ட படங்களை போல், ‘ஆபரேஷன் ட்ரெட்ஸ்டொன்’ என்ற முயற்சியை சிஐஏ அமைப்பு மேற்கொள்கிறது.
இதில் பயிற்சி பெறும் ஏஜெண்டுகள் சாதாரண மனிதர்களை விட பல மடங்கு பலமும், திறனும் கொண்டவர்களாக மாறி, சிஐஏ சொல்லும் ஆட்களை திறம்படக் கொலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர். அப்படியான ஒரு ஏஜெண்ட் தான் ஜேசன் பார்ன்.
ஆபரேஷன் ட்ரெட்ஸ்டோன் என்பதை மையமாக வைத்து, ஜேசன் பார்ன் கதைகள் உலகளவில் நடப்பது போல ட்ரெட்ஸ்டோன் தொலைக்காட்சி தொடர் உருவாகியுள்ளது. இதன் முதல் சீசனில், சர்வதேச அளவில் ஸ்லீப்பர் ஏஜெண்டுகளாக செயல்படுபவர்களின் கதைகள் சொல்லப்படவுள்ளன. இந்த சீரிஸில் ‘நீரா படேல்’ என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். டெல்லியில் ஹோட்டல் பணிப்பெண்ணாக இருக்கும் ஒரு சிஐஏ ஏஜெண்ட்.
பார்ன் (Bourne) படங்களைத் தயாரித்த பென் ஸ்மித், டிம் க்ரிங் என்பவருடன் இணைந்து இந்தத் தொடரை உருவாக்கியுள்ளார். இந்த சீரிஸின் புரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு காட்சியில் நடிகை ஸ்ருதிஹாசனும் ஆக்ஷன் ஸ்டண்ட்களை செய்துள்ளார். அமெரிக்க டிவி சீரிஸில் நடிக்கும் முதல் தென்னிந்திய நடிகை ஸ்ருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டிவி சீரிஸில் நடிக்கும் முதல் SOUTH STAR ஸ்ருதி- புரொமோ வீடியோ இதோ வீடியோ