வெங்கட் பிரபு - வைபவ் இணையும் 'லாக் அப்' படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு சிம்புவை ஹீரோவாக வைத்து 'மாநாடு' படத்தை இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அந்த படம் நடைபெற தாமதமானது. அந்த படம் சிம்பு தவிர்த்து வேறு நடிகரை வைத்து தொடங்கப்படும் என்பது போன்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

Venkat Prabhu and Vaibhav's Lock Up Movie First Look is Out

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது பிரபல நடிகர் வைபவுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை பிரபல நடிகர் நிதின் சத்யா தயாரிக்கிறார். அரோல் குரோலி இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு லாக் அப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஜி.சார்லஸ் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.