பிக்பாஸ் மகத்தின் கல்யாணத்தில் பாராம்பரிய உடையில் சிம்பு - ஃபோட்டோ டிரெண்டிங்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மகத்திற்கும் தனது காதலியான பிராய்ச்சிக்கும் திருமணம் கடந்த ஜனவரி 30ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் சிம்பு பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

STR attends Bigg Boss Fame Mahat's Marriage, Pics goes Viral

சிம்பு கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சிம்புவும் மகத்தும் நீண்ட காலமாக நண்பர்களாக அறியப்படுகின்றனர். இருவரும் இணைந்து சமீபத்தில் சபரிமலை சென்று வந்தனர்.

நடிகர் மகத், தல அஜித்தின் 'மங்காத்தா', விஜய்யின் 'ஜில்லா', 'சென்னை 28 பார்ட் 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்

Entertainment sub editor