www.garudabazaar.com

"உடல் எடையை குறைத்தும் ரசிகர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள்"!. பிரபல நடிகை வருத்தம்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "நீ தானே என் பொன் வசந்தம்" (2012) படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் வித்யுலேகா ராம். நடிகர் மோகன் ராமின் மகளான இவர் “தீயா வேலை செய்யனும் குமாரு” (2013), 'மாலினி 22 பாளையங்கோட்டை' (2014), 'வீரம்' (2014), 'ஜில்லா' (2014), மற்றும் தெலுங்கு திரைப்படம் 'ராமையா வஸ்தவய்யா' (2013) போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களால் அறியப்பட்டவர்.

STILL PEOPLE FAT SHAME ME SAYS POPULAR ACTRESS

கட்டுப்பாடான உணவு முறை மற்றும் பளுதூக்குதலில் ஈடுபட்டு வரும் நடிகை வித்யுலேகா ராமன், தனது உடற்பயிற்சி முறை குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி வருகிறார், மேலும் அவரது ரசிகர்களையும் இந்த பாதையில் செல்ல ஊக்குவிக்கிறார்.

STILL PEOPLE FAT SHAME ME POPULAR TAMIL ACTRESS

சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றிய ஒரு பதிவை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, "20 கிலோ எடை குறைத்துள்ளேன், இருப்பினும் மக்கள் என்னை கொழுப்பு நிறைந்த ஒரு பன்றி என்று திட்டுகிறார்கள், நான் நடனமாடும் போது ஒரு நாள் பூகம்பம் ஏற்படும் என்று கிண்டல் செய்கின்றனர்” என வருத்தப்பட்டுள்ளார்.

STILL PEOPLE FAT SHAME ME POPULAR TAMIL ACTRESS

வித்யுலேகா ராமன் தனது வருங்கால கணவர் சஞ்சயுடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். சஞ்சய் ஒரு உடற்பயிற்சி ஆலோசகர் மற்றும் தொழிலதிபர். கீட்டோ மற்றும் வீகன் உணவுகளை சுவை அறிந்து சொல்வதில் நிபுணத்துவம் வாய்ந்த கீட்டோ சென்னை எனும் நிறுவனத்தை நடத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"உடல் எடையை குறைத்தும் ரசிகர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள்"!. பிரபல நடிகை வருத்தம்!!! வீடியோ

STILL PEOPLE FAT SHAME ME SAYS POPULAR ACTRESS

People looking for online information on Jilla, Neethaane En Ponvasantham, Theeya Velai Seiyyanum Kumaru, Veeram will find this news story useful.