www.garudabazaar.com

Ritika Singh: புடவை "Photo Shoot" அப்போ குளத்தில் தவறி விழுந்த ரித்திகா.. அதுக்கு அப்றம் நடந்த அல்டிமேட் fun..! Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்.மாதவன் நடித்த ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட திரைப்படங்களில் மூலம் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங்.

Ritika singh fell down in Pool viral photoshoot fun video

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் இணைந்து, ‘ஆண்டவன் கட்டளை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரித்திகா சிங், பின்னர் அசோக் செல்வனுடன் இணைந்து, ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒரு ஹீரோயினாக நடித்திருந்தார். அதில் அவருடைய கேரக்டர் மிகவும் வித்தியாசமாக இருந்ததை அடுத்து பலரையும் கவர்ந்தது.

அதன் பின்னர் ரித்திகா சிங், புடவையில் இருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வந்தன. இணையதளத்தில் இந்த புகைப் படங்கள் ரசிகர்களால் தொடர்ந்து பகிரப்பட்டும் வந்தன. இந்த நிலையில்தான் இந்த புடவை ஃபோட்டோஷூட்டுக்கு பின்னால் நடந்த குட்டி ஸ்டோரியை ரித்திகா சிங் பகிர்ந்திருக்கிறார்.

Ritika singh fell down in Pool viral photoshoot fun video

அதன்படி குளத்தின் அருகே நின்று ஃபோட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்த ரித்திகா சிங், குளத்தில் கைவைத்து தண்ணியை வாரி இரைப்பது போலவும், மல்லிகைப் பூவுடன் குளக்கரையில் அமர்ந்திருப்பது போன்றும் பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இந்த ஃபோட்டோ ஷூட்டின்போது, ரித்திகா சிங் தவறிப்போய் குளத்தில் விழுந்து விட, அனைவரும் ரித்திகா சிங்கை தூக்கி விடுவதற்கு முயற்சித்தனர்.

ALSO READ: சொகுசு பங்களாவில் ‘பெண்களை’ ஏலம் விட்டு பலான ‘பார்ட்டி’ நடத்திய துணை நடிகை! சிக்கியது எப்படி தெரியுமா?

ஆனால் ரித்திகா சிங்குக்கோ, சிரிப்பை அடக்கமுடியவில்லை. முதலில் தன்னை வீடியோ எடுக்குமாறு கூறி, தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். பின்னர் படிக்கரையில் வந்து அமர்ந்த பின்னும் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் அவரே பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவும் அதன் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தான் வைரல் ஆகி வருகின்றன.

இதனிடையே ரித்திகா சிங் BOXER, வணங்காமுடி, பிச்சைக்காரன்-2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

RITIKA SINGH: புடவை "PHOTO SHOOT" அப்போ குளத்தில் தவறி விழுந்த ரித்திகா.. அதுக்கு அப்றம் நடந்த அல்டிமேட் FUN..! VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ritika singh fell down in Pool viral photoshoot fun video

People looking for online information on Ritika singh, Trending, VideoViral, ViralVideo will find this news story useful.