www.garudabazaar.com
iTechUS

"Update வந்தா பொண்டாட்டி கிட்ட கூட சொல்லமாட்டோம்..." - அப்செட் ஆன Jr NTR.? என்ன ஆச்சு.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியாகி இருந்த திரைப்படம் "RRR". இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Jr NTR about update asking by fans in frequent times

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஷாருக்கான் நடிப்பில் பதான்.. ஸ்பெஷல் ஷோ பார்த்த கமல்.. உடன் இருந்த 80ஸ் நடிகைகள்!!

பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி இருந்த RRR திரைப்படம், இந்தியாவைத் தாண்டி உலக அளவிலும் கவனம் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுகள் பட்டியலில், RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் நாமினேஷனில் இடம்பெறுள்ளது.

இந்தியாவில் உருவாகி, சர்வதேச அளவில் இந்த திரைப்படம் கவனம் பெற்றுள்ள நிலையில், இதில் பீமன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பும் இந்தியாவை தாண்டி உலக அளவில் புகழ்பெற்றது.

இதனால் அவரது அடுத்தடுத்து திரைப்படங்கள் குறித்து அப்டேட்டுகளை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் அப்டேட் கேட்பது குறித்து சில கோரிக்கைகளை ஜூனியர் என்டிஆர் வைத்துள்ளார்.

Jr NTR about update asking by fans in frequent times

Images are subject to © copyright to their respective owners.

"சில நேரம் நாங்கள் வேலை செய்யும் படத்தில் அடிக்கடி ஏதாவது தகவலை சொல்லிக் கொண்டிருக்கும் சூழல் இருக்காது. தினந்தோறும் மணி கணக்கிலும் அப்டேட்டுகளை நாங்கள் வெளியிடவும் முடியாது. உங்களின் உற்சாகமும், ஆர்வமும் எங்களுக்கு புரிகிறது. ஆனால் சில நேரம் இவை அனைத்தும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு கடும் மன அழுத்தத்தை கொடுக்கிறது. இந்த பிரஷர் காரணமாக ஏதாவது அப்டேட்டை நாங்கள் கொடுக்கும் போது, அது பெரிய அளவில் மதிப்பு இல்லாமல் போனால் ரசிகர்களை ஏமாற்றம் அடையவும் வைக்கும்.

இதனால் ஏதாவது அப்டேட் இருந்தால் நாங்கள் நிச்சயம் ரசிகர்களுடன் தான் முதலில் பகிர்ந்து கொள்வோம். எங்கள் மனைவியிடம் கூட இதனை பகிராமல் முதலில் உங்களிடம் தான் கூறுகிறோம். நீங்கள் இவ்வளவு முக்கியமானவர்கள் என்பதால் தான் இதனை நாங்கள் செய்கிறோம். அப்டேட் பகிர்ந்து கொள்வதற்கான மதிப்பு இருந்தால் நிச்சயம் முதலில் உங்களிடம் தான் பகிர்ந்து கொள்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக "JrNTR 30" என்ற படம் குறித்த அப்டேட் கேட்டபோது தான் ஜூனியர் என்டிஆர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Also Read | "வெளிய வந்து கேம் ஆடுறாங்க".. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Open- ஆ பேசிய தனலட்சுமி

"UPDATE வந்தா பொண்டாட்டி கிட்ட கூட சொல்லமாட்டோம்..." - அப்செட் ஆன JR NTR.? என்ன ஆச்சு.? வீடியோ

Tags : Jr ntr

Jr NTR about update asking by fans in frequent times

People looking for online information on Jr ntr will find this news story useful.