'எங்கேயும் எப்போதும்' ஷர்வானந்த் -க்கு விரைவில் டும் டும் டும்!.. வாழ்த்தும் பிரபலங்கள்!!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஷர்வானந்த். தெலுங்கில் பிரபலமான இவர், அங்கே ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் கணம் என்ற திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
இதனிடையே, ஷர்வானந்த் திருமணம் குறித்து சில தகவல்களும் அதிகம் வைரலாகி வந்தது. இந்த நிலையில், அவரது நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது. ரக்ஷிதா என்ற பெண்ணுடன் ஷர்வானந்த் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர் மறைந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த போஜ்ஜலா கோபால கிருஷ்ண ரெட்டியின் பேத்தி ஆவார். மேலும், ரக்ஷிதாவின் தந்தை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் உள்ளார் என தெரிகிறது.
இந்த நிலையில், ஷர்வானந்த் - ரக்ஷிதா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் வைத்து நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த ஜோடி மோதிரம் மாற்றிக் கொண்டது.
மெகாஸ்டார் சிரஞ்சீவி குடும்பம், நாகர்ஜுனா குடும்பம், ராம் சரண், உபசனா, அகில், நாணி, ராணா டகுபதி, சித்தார்த், அதிதி ராவ் ஹைடாரி, நிதின், ஸ்ரீகாந்த், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் மற்றும் ரவி, சித்தாரா நாக வம்சி, இயக்குனர் க்ரிஷ், சுதீர் வர்மா, சண்டூ மொண்டேட்டி, வெங்கி அட்லுரி, அபிஷேக் அகர்வால், சுப்ரியா, ஸ்வப்னா தத், ஏசியன் சுனில், சுதாகர், தேவா கட்டா, Vyra Entertainments தயாரிப்பாளர்கள், UV க்ரியேஷன்ஸ் வம்சி மற்றும் விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் சர்வானந்த் - ரக்ஷிதா திருமண தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்வானந்த் நிச்சயதார்த்த புகைப்படங்கள், அதிகம் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Shivin Asks Vikraman About His Marriage In BiggBoss 6
- Anant Ambani Radhika Merchant Engagement Bollywood Celebrities List
- Vasishta N Simha Harippriya Marriage Date And Venue
- Hansika Motwani Shares Pictures Of Her Marriage Goes Viral
- Serial Actress Tejaswini Gowda Marriage Photos
- Is Ayesha Getting Marriage Soon Breaking Interview
- Producer Dhananjayan Younger Daughter Marriage Pics Trending
- Ram Charan Upasana Are Expecting Their First Child
- Thalapathy Vijay Attend Marriage Function Video Gone Viral
- Anjali About Her Marriage And Film Career Exclusive
- T Rajendar Answered About Silambarasan TR Marriage
- Shwetha Bandekar Marriage With VJ Mal Maruga Viral Photos
தொடர்புடைய இணைப்புகள்
- 'ஆழ்கடலில் மணமக்களுக்கு BANNER'..😍 வேற லெவல் கல்யாண பரிசு கொடுத்த உயிர் நட்புகள்..!
- വധുവിന് പരമാവധി സമ്മാനം ഒരു ലക്ഷവും 10 പവനും, സ്ത്രീധന നിരോധന ചട്ടം പരിഷ്കരിക്കുന്നു
- 'இரண்டாவது திருமணம் செய்த மனைவி'.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த கணவன்.. பரபரப்பு சம்பவம்.!
- 'Stadium-ஐ திரும்பி பாக்க வைத்த Fan'..'எங்க தலைக்கு தில்ல பாத்தியா?😂'...#SA20 #JoburgSuperKings
- കഴിഞ്ഞ വർഷം ഏറ്റവും കൂടുതൽ കല്യാണങ്ങൾ നടന്നത് DELHI നഗരത്തിൽ.
- "2 பேர LOVE பண்ணியுமா உனக்கு கல்யாணம் ஆகல?" 90'S KIDS-ன் ஜாதகத்தை பார்த்து மிரண்டுபோன ஜோதிடர்கள்!
- വിവാഹത്തില്നിന്ന് പിന്മാറിയതിന് വീടുകയറി ആക്രമണം | പെൺകുട്ടി ഉൾപ്പെടെ പത്തോളം പേർക്കെതിരെ
- ഭർത്താവറിയാതെയുള്ള പ്രണയം, യുവതിയെ കൊലപ്പെടുത്തി ആഭരണങ്ങൾ കവർന്ന് കാമുകൻ
- பெங்களூரு TO கேரளா😍.. குடும்பத்தில் ஒரு அங்கமான செல்லப்பிராணி.. எவ்வளோ CUTE பாருங்க❤️!
- കല്യാണം കൂടാനെത്തിയ പെണ്കുട്ടിയുടെ മുടി മുറിച്ചു, സംഭവം ഓഡിറ്റോറിയത്തിലെ തിരക്കിനിടെ
- 2022 வருடத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்... இந்த வருஷ ராசி போல
- வேற லெவல் FRIENDSHIP🔥.. திருமணத்திற்கு SURPRISE ENTRY கொடுத்த தோழி.. கண்கலங்கி நின்ற MOMENT❤️..!