www.garudabazaar.com

அந்த சாராவும் இல்ல.. இந்த சாராவும் இல்ல.. ரஷ்மிகாவா..? வதந்தியின் உச்சம்.. சுப்மன் கில் Reply

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோர் ஒன்றாக உணவகம் ஒன்றில் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலாகி இருந்தது.

Shubman Gill on rumours of Rashmika Mandanna being his crush

அப்படி ஒரு சூழலில், நடிகை சோனம் பாஜ்வா பஞ்சாபியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தார்.  இது தொடர்பான ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இதில் சுப்மன் கில்லிடம், "பாலிவுட்டில் மிகவும் ஃபிட்டான நடிகை யார்?" என சோனம் பாஜ்வா கேட்பது இடம்பெற்றுள்ளது. இதற்கு சாரா என்றும் கில் பதிலளிக்கிறது தெரிகிறது. தொடர்ந்து "அடுத்ததாக நீங்கள் சாராவை டேட்டிங் செயகிறீர்களா?" என சோனம் கேட்கும் கேள்விகள் இருக்க, "இருக்கலாம்" என கில் சொன்னதும் மீண்டும், "தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்" என சோனம் கேட்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கரை காதலிக்கிறார் என்றும் வதந்திகள் பரவின. அப்படி ஒரு சூழ்நிலையில் தான் சுப்மன் கில்லின் காதலி அல்லது க்ரஷ் யார்? சச்சின் மகள் சாராவா? இல்லை இந்தி நடிகை சாரா அலி கானா? என்றெல்லாம் இணையவாசிகள் மத்தியில் பரபரப்பான பேச்சுக்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் பிரபல சினிமா செய்தி ஊடக உரையாடலில் ரஷ்மிகாவை தனக்கு பிடிக்கும் என சுப்மன் கில் சொன்னதாகவும் அதனால் சுபம் கில்லின் க்ரஷ் ரஷ்மிகாதான் என்றும் சிலர் மீண்டும் வதந்திகளை பரப்பி வந்தனர்.

Shubman Gill on rumours of Rashmika Mandanna being his crush

இந்நிலையில் தற்போது இப்பதிவுகளுக்கு பதில் கொடுத்திருக்கும் சுப்மன் கில்,  “எந்த மீடியாவோடு நான் பேசும்போது இப்படி நடந்தது? இது பற்றி எனக்கே எதுவும் தெரியாதே?” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் இந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Shubman Gill on rumours of Rashmika Mandanna being his crush

People looking for online information on Rashmika Mandanna, Shubman Gill will find this news story useful.