மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் Sakshi, Abirami, Mohan... - Bigg Boss புரோமோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 03, 2019 12:17 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் போட்டியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் கவின் சேரனையும் ஷெரினையும் அவர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்று நாமினேட் செய்தார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத வனிதா, கவினுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தற்போது ஒளிபரப்பான முதல் புரோமோவில் கவின் செய்தது தவறு என்று கூறி தனது மைக்கை எல்லாம் கழட்டி வைத்து பிரச்சனை செய்தார்.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பான புரோமோவில் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்தியா உள்ளிட்டோர் மீண்டும் உள்ளே நுழைகின்றனர். அவர்களை எதிர்பாராத போட்டியாளர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர். பின்னர் ஷெரினை பார்த்து சாக்ஷி நீ இந்த கேமை ஜெய்க்கனும் என்கிறார் . எப்படி என்று ஷெரின் கேட்க, பேசுவோம் என்கிறார்.
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் SAKSHI, ABIRAMI, MOHAN... - BIGG BOSS புரோமோ இதோ வீடியோ
Tags : Sakshi, Abhirami, Mohan, Bigg Boss 3