ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் குறித்து சேது, பிரெண்ட்ஸ், போக்கிரி, காஞ்சனா படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகர் ஸ்ரீமன் உணர்வுப்பூர்வமான வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், 19 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் திரையுலக வாழ்வில் முதன் முதலில் லெஜண்ட் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கிறேன்.
மேலும் சந்தோஷ் ஜியின் ஒளிப்பதிவில் நடிப்பதில் மகிழ்ச்சி. லைக்கா நிறுவனத்துக்கு நன்றிகள். ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள். என்று தெரிவித்துள்ளார்.