Breaking: இந்த டபுள் ஹீரோ படத்தில் ஹீரோயினாகும் ஸ்ரீபல்லவி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 24, 2019 10:20 PM
நடிகர் விதார்த் இயக்குநர் விஜய்யின் சகோதரரும் நடிகருமான உதயாவுடன் இணைந்து 'அக்னி நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். நடிகர் உதயா கடைசியாக 'உத்தரவு மஹாராஜா' படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் மற்றும் கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தை புதுமுக இயக்குநர் சரண் இயக்குகிறார். 'தடம்' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவரான ஸ்மிருதி வெங்கட் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக தாதா 87 படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீ பல்லவி நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : Vidharth, Sri Pallavi, Udhaya