சௌந்தர்யா என்னிடம் சொன்ன கடைசி ரகசியம் - இயக்குனர் ஆர் வி உதயகுமார்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 27, 2019 03:41 PM
90 களில் தென்னிந்திய மொழிகளில் நட்சத்திர நடிகையாக வலம் வந்த சௌந்தர்யாவைப் பற்றி இயக்குனர் ஆர் வி உதயகுமார் ரகசியம் ஒன்றை சொல்லியுள்ளார்.

ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி என தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களோடும் ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவரை பொன்னுமனி எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆர் வி உதயகுமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். 2004 ஆம் ஆண்டு பாஜகவுக்காக பிரச்சாரத்திற்காக சென்ற அவர் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில் அவரைப்பற்றி இயக்குனர் உதயகுமார் தனது நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘என்னுடைய பொன்னுமனிப் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினேன். அடுத்ததாக சிரஞ்சீவி படத்திற்கும் அவரை நான் சிபாரிசு செய்தேன். அதனால் என்மேல் பாசமாக எப்போதும் என்னை அண்ணா என்று அழைப்பார். ஒரு நாள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். பின்னர்தான் அவர் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய சென்றபோது விபத்துக்குள்ளானார். அதைத் தொலைக்காட்சியில் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவரது இறுதி மரியாதை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவர் புதிதாக கட்டியிருந்த வீட்டில் என் புகைப்படத்தை பார்த்து அடக்கமுடியாமல் அழுதேன்.’ எனக் கூறி மேடையிலேயே கண்கலங்கினார்.