Godavari News Banner USA

அடுத்து இந்த டபுள் ஹீரோ படத்தில் நடிக்கும் தடம் ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விதார்த் கடைசியாக ராஜன் மாதவ் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு மணிரத்னத்தின் சூப்பர் ஹிட் பட டைட்டிலான 'அக்னி நட்சத்திரம்' பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

Thadam Heroine Smruthi Venkat Joins Vidharth's Agni Natchathiram

இந்த படத்தில் அவருடன் இயக்குநர் விஜய்யின் சகோதரர் உதயா  நடிக்கிறார். இவர் கடைசியாக உத்தரவு மஹாராஜா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அக்னி நட்சத்திரம் படத்தை சரண் இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் குறித்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தில் தடம் படத்தின் ஹீரோயின் ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடிக்கிறார்.