இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெண்ணிலா கபடி குழு 2’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘திருவிழா’ பாடல் ஒன்றை வெளியாகியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், சூரி, கிஷோர், சரண்யா மோகன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இதன் இரண்டாம் பாகத்தை சுசீந்திரனின் உதவி இயக்குநர் செல்வ சேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி, அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சாய் அற்புதம் சினிமாஸ் பேனரின் கீழ் பூங்காவனம் மற்றும் அனந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். செல்வகணேஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் திருவிஆ மோடில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலை கபிலன் எழுதியுள்ளார்.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனிருத்தின் திருவிழா ட்ரீட்- வெண்ணிலா கபடி குழு பாடல் இதோ வீடியோ