சந்தானம் படத்தில் இணைந்த பழம்பெரும் நடிகை! -விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ் உள்ளட்டோர் நடித்து பூமராங் என்ற படம் வெளியாகியிருந்தது.

Sowcar Janaki Joins in the set of Santhanam Kannan Next

இதனையடுத்து அவர் சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனமும், எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன் நிறுவனமும் தயாரிக்கின்றன.

இந்த  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் செப்டம்பர் மாதம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சி பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.  இந்த படத்துக்கு "வித்தைக்காரன்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் அவரின் 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.