கண்ணான கண்ணே பாடிய பார்வையற்ற இளைஞனுக்கு டி.இமான் கொடுத்த இன்ப அதிர்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 24, 2019 09:22 AM
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான படம் விஸ்வாசம். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற தந்தை - மகள் பாசத்தைக் கூறும் கண்ணான கண்ணே பாடலை திரையரங்கில் கண்ட ரசிகர்கள் பெரும்பாலானோர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

இந்நிலையில் இந்த பாடலை பார்வை மாற்றுத்திறனாளி இளைஞன் ஒருவன் பாடிய வீடியோ சமீபத்தில் மிகுந்த வைரலானது. ரசிகர்கள் இந்த வீடியோவை மிகுந்த ஆர்வமுடன் பகிர்ந்து வந்தனர்.
இதனிடையே இசையமைப்பாளர் டி.இமான், இவரின் முகவரி, தொடர்பு எண் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கேட்டறிந்தார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த மற்றொரு பதிவில், அவரது தொடர்பு எண்ணை பகிர்ந்ததற்கு நன்றி. அவரிடம் பேசினேன். விரைவில் அவரை ஒரு பாடலுக்கு பயன்படுத்திக்கொள்வேன். திருமூர்த்திக்கு மகிழ்ச்சியான் நாட்கள் காத்திருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்ணான கண்ணே பாடிய பார்வையற்ற இளைஞனுக்கு டி.இமான் கொடுத்த இன்ப அதிர்ச்சி வீடியோ