பிகில் படத்திலிருந்து வெளியான 'மாதரே' லிரிக்கல் வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 20, 2019 07:53 PM
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வரும் 25 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், விவேக், இந்துஜா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சின்மயி பாடியுள்ள "மாதரே" பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகில் படத்திலிருந்து வெளியான 'மாதரே' லிரிக்கல் வீடியோ இதோ வீடியோ