ராகவா லாரன்ஸ் இயக்கம் 'லட்சுமி பாம்' ரிலீஸ் அப்டேட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 27, 2019 02:40 PM
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் வெளிவந்த 'காஞ்சனா' படத்தின் முதல் பாகம் ஹிந்தியில் 'லட்சுமி பாம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் அதிலிருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் படத்தை இயக்க வைத்தார்கள். தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

லட்சுமி பாம் படத்தில் அக்ஷய்குமார் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். தமிழில் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். அக்ஷய்குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மிஷன் மங்கல்' படம் 150 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் அவர் நடித்து அடுத்தடுத்து சில படங்கள் வெளிவர உள்ளன. 'ஹவுஸ்புல் 4, குட் நியூஸ், சூர்யவன்ஷி' ஆகிய படங்கள் 'லட்சுமி பாம்' படத்திற்கு முன்னதாக வெளியாகின்றன.
'லட்சுமி பாம்' படத்தை 2020ம் ஆண்டு ரம்ஜான் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.