அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய கமல் - லேட்டஸ்ட் ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 28, 2019 11:50 AM
கமல் ஹாசனின் காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று வீடு திரும்பினார்.

கடந்த 2016ம் ஆண்டு கமல் ஹாசனுக்கு வலது காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் காலில் தற்காலிக டைட்டானியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது.
அரசியல், சினிமா என்று தொடர்ந்து பிசியாக இருந்த கமல் நெடுநாட்களாக கம்பியை நீக்காமல் விட்டிருந்தார். இந்நிலையில் சில தினங்ளுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் டைட்டானியம் கம்பி நீக்கப்பட்டது.
இதையடுத்து கமல் நேற்று மாலை தன் வீடு திரும்பினார். அவர் உடல்நலம் சீருடன் இருப்பதாக கூறப்படுகிறது.
Tags : Kamal Haasan