www.garudabazaar.com

"குற்றஉணர்ச்சியாக இருக்கு".... அப்பாவின் பிரிவால் அனிதா சம்பத் வெளியிட்ட உருக்கமான பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தையும், எழுத்தாளருமான R.C. சம்பத் அவர்கள் இன்று காலை மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 62. இந்த துயரமான சம்பவம் அனிதாவின் குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்று கூறிவந்த நிலையில் தந்தையின் மரணம் பற்றி அனிதா ஒரு உருக்கமான பதிவிட்டுள்ளார்.

Anitha sampath heart breaking post on father அப்பாவின் பிரிவால் அனிதா சம்பத்

அதில் கூறும்போது "எனது தந்தை மதிப்பிற்குரிய R.C.சம்பத் அவர்கள் திடீரென வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 62. என்னால் இன்னும் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமை படுத்திகொள்ளும்  முன்பாக அவரை பார்த்தேன். நான் வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது அவர் இல்லை. ஷிரிடி சென்று இருந்தார். அவரிடம் நான் போனில் கூட பேச முடியவில்லை. காரணம் அவரது போன் தொடர்புக்கு வெளியே இருந்தது. இந்நிலையில் இன்று எட்டு மணிக்கு இந்த துயரமான சம்பவத்தைப் கேட்டேன். அவர் சென்னை திரும்பி வரும்பொழுது ஆந்திராவுக்கு அருகே அவர் உயிர் பிரிந்துள்ளது. அவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னால் நம்பமுடியவில்லை. அப்பா நீ வீட்டுக்கு நடந்து வரணும். உன்கிட்ட நான் நெறைய பேசனும். உன் குரல் கேட்டு 100 நாள் மேல ஆச்சு. அப்பாவுக்கு அல்சர் இருந்தது.

அவர் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரால் எதுவும் உட்கொள்ள முடியவில்லை. அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடையவில்லை. தெரிஞ்சிருந்தா முன்னாடியே எலிமினேட் ஆகி அப்பா கூட கொஞ்ச நாள் இருந்து இருப்பேன். விஜய் டிவி ஷோ திரும்ப வரும், என் அப்பா திரும்ப வர மாட்டாரு. இந்த வாரம் காப்பாற்றப்பட்டு இருந்தால் கடைசியாக கூட பார்த்திருக்க முடியாது. வாழ்க்கையை கணிக்க முடியவில்லை. எல்லாம் ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது. தயவு செய்து உங்கள் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவரை இழந்துவிட்டேன். குற்ற உணர்ச்சியாக இருக்கிறது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

"குற்றஉணர்ச்சியாக இருக்கு".... அப்பாவின் பிரிவால் அனிதா சம்பத் வெளியிட்ட உருக்கமான பதிவு..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anitha sampath heart breaking post on father அப்பாவின் பிரிவால் அனிதா சம்பத்

People looking for online information on Anitha Sampath will find this news story useful.