Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

PS1: "என் ரொம்ப நாள் கனவு.. ஒருநாள் நடக்கும்..!".. பொன்னியின் செல்வன் குறித்து பிரசன்னா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1" செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Prasanna hope for historical character like Ponniyin Selvan

Also Read | Vishal : நடிகர் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு.. காவல் நிலையத்தில் மேலாளர் பரபரப்பு புகார்.!

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்ள, கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Prasanna hope for historical character like Ponniyin Selvan

இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

Prasanna hope for historical character like Ponniyin Selvan

செப்டம்பர் 30-ஆம் தேதி, படம் ரிலீசாக உள்ள நிலையில் நடிகர் பிரசன்னா பொன்னியின் செல்வன் படத்தில் சியான் விக்ரம் கதாப்பாத்திரம் பற்றி ட்வீட் செய்திருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பொன்னியின் செல்வன் படத்தில், நடிகர் விக்ரம் தோன்றும் வீடியோவை, தம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகர் பிரசன்னா அதில்,"நான் நடிகராக வேண்டும் என கனவு காண ஆரம்பித்ததில் இருந்து, இதுபோன்ற ஒரு போர்வீரனாக குதிரையில் ஏறி வலம்வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். இதில் நடிகர் விக்ரமை பார்க்கும் போது என்னையே பார்ப்பது போல இருக்கிறது. என்னுடைய இந்த கனவு என்றாவது ஒருநாள் நிறைவேறும் என ஆசைப்படுகிறேன்.  ‘சியான்’ விக்ரம் இந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக இருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | அந்த படத்துலயே ஆசப்பட்டேன்.. ஆனா சந்தானம் வந்ததும் ரூட்டே மாறிடுச்சு.. உடைத்த சுந்தர் C

தொடர்புடைய இணைப்புகள்

Prasanna hope for historical character like Ponniyin Selvan

People looking for online information on Ponniyin Selvan, Ponniyin Selvan part 1, Prasanna, PS1 will find this news story useful.