www.garudabazaar.com

எஸ்.ஜே.சூர்யாவுடன் பிக்பாஸ் நடிகை இணையும் படத்தின் FirstLook அப்டேட்.. நடிகையின் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

SJ Suryah Yashika Aannand Kadamaiyai Sei Update கடமையை செய்

முன்னதாக சந்தோஷ்.பி.ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பல படங்களில் பிஸியானார். 

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பாக தான்  நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை ஈசிஆர் சாலையில் நண்பர்களோடு காரில் சென்றபோது விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் தம் தோழியை பறிகொடுத்த யாஷிகா ஆனந்த், தானும் காயமுற்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் "கடமையை செய்" படத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. இந்த தகவலை யாஷிகா ஆனந்த் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பட போஸ்டரை பகிர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த், “வாழ்க்கை ஒரு பக்கம் உணர்ச்சிகளற்றும் காயங்களுடனும் போகிறதென்றால், இன்னொரு பக்கம் கடந்தும் போக வேண்டுமே” என பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தை வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தை கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் நாஹர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் நடித்தார். அத்துடன் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Also Read: “போடுறா வெடிய!!”..தளபதி பட இயக்குநர் இயக்கிய சிவகார்த்திகேயன் பட மாஸ் ரிலீஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suryah Yashika Aannand Kadamaiyai Sei Update கடமையை செய்

People looking for online information on Kadamaiyai Sei, KadamaiyaiSeiFirstLook, Sj suryah, Yashika Aannand will find this news story useful.