அட.. நம்ம எஸ்.ஜே.சூர்யா... பிரபல டிவி சீரியல் ஷூட்டிங் செட்டில்... செம்ம வைரல் ஆகும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரவீன் பென்னட் இயக்கத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ராஜா ராணி 2-ஆம் பாகம்.

SJ Suryah spotted in vijay tv rajarani shooting set viral pic

ஆல்யா மானசா மற்றும் சித்து ஆகியோர் நடிக்கும் இந்த சீரியலில், சந்தியாவின் மீது இருந்த நகை திருட்டு பழி தற்போது விலகியுள்ளது. வீடியோ கேமரா ஆதாரத்தை காண்பித்து சரவணன், இந்த நகைத்திருட்டுக்கு காரணம் தன் சகோதரன் செந்திலும், செந்திலின் மனைவி அர்ச்சனாவும் தான் என்று நிரூபித்ததை அடுத்து, சந்தியாவிடம் அவரது மாமியார் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்தியாவை, நல்ல மருமகளாக ஏற்றுக்கொள்வதற்கு, அவரது மாமியார் சிவகாமி கொடுத்த 3 மாத காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து, இனி நடக்கப்போவது என்ன? என்கிற சுவாரஸ்யமான கட்டத்தினை நோக்கி இந்த சீரியல் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜா ராணியின் செட்களில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் வைரல் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இந்த சீரியலில் அர்ச்சனாவாக நடிக்கும் விஜே அர்ச்சனாவுடன் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அண்மையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், நெஞ்சம் மறக்க முடியாத அசுர நடிப்பால், அனைவர் நெஞ்சத்தையும் அள்ளிய எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக பொம்மை, சிலம்பரசன் நடிக்கும் மாநாடு, மற்றும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் ராஜா ராணி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.ஜே.சூர்யா இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ALSO READ: "சந்தியாவோட 3 மாச கெடு முடிஞ்சுது!".. மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்த ட்விஸ்ட்!

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suryah spotted in vijay tv rajarani shooting set viral pic

People looking for online information on RajaRani2, Sj suryah, Trending, VijayTelevision, Viral will find this news story useful.