www.garudabazaar.com

“போடுறா வெடிய!!”.. தளபதி பட இயக்குநர் இயக்கிய சிவகார்த்திகேயன் பட மாஸ் ரிலீஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் முக்கியமான படம் 'டாக்டர்'.

Sivakarthikeyan Nelson Dilipkumar Doctor release update டாக்டர்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படம் பல மாதங்களுக்கு முன் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் பல காரணங்களால் ரிலீஸ் தாமதமானது. தள்ளிப்போனது. அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையிலும், OTT தளங்களில் பல படங்கள் வெளியான நிலையிலும், டாக்டர் படமும்  OTT-யில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

Sivakarthikeyan Nelson Dilipkumar Doctor release update டாக்டர்

முன்னதாக கடந்த மே மாதம் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளால், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு தேர்தல் உள்ளிட்ட பல காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போனது.

தற்போது தமிழக அரசின் புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Sivakarthikeyan Nelson Dilipkumar Doctor release update டாக்டர்

'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, வினய், யோகி பாபு, அர்ச்சனா, அருண் அலெக்சாண்டர், தீபா மற்றும் இளவரசு ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், இப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தற்போது தளபதி விஜய்யின் 65வது படமான Beast படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ படப்பிடிப்பில் இருக்கிறார்.

Also Read: “அடிபொலி”.. அப்டி போடுங்க!!.. ‘மோகன்லாலை’ இயக்கும் தல அஜித் பட இயக்குநர்.. மாஸ் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Nelson Dilipkumar Doctor release update டாக்டர்

People looking for online information on Anirudh Ravichander, ‎KJR Studios, Doctor, Nelson Dilipkumar, Sivakarthikeyan, Vijay will find this news story useful.