மான்ஸ்டருக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் எஸ்ஜே சூர்யா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 21, 2019 01:38 PM
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து கடந்த மே 17 ஆம் தேதி வெளியான படம் மான்ஸ்டர். இந்த படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் உள்ளிட்டோர் தயாரித்திருந்தனர்.

இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
குறிப்பாக தனது வெகுளித்தனமான நடிப்பால் குழந்தைகளின் மனதிலும் அவருக்கு இடம் கிடைத்தது. இதனையடுத்து ராதா மோகன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
பொதுவாகவே ராதா மோகனின் படங்கள் மெல்லிய, இயல்பான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்பதனை கருத்தில் கொண்டு நடிக்க முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.